பந்தலூர் : பந்தலூர் சேரங்கோடு மகளிர் தையல் பயிற்சி மையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கூடலூர்
நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தமிழ்நாடு அறக்கட்டளை ஷாலோம்
சாரிட்டபிள் டிரஸ்ட், பந்தலூர் வட்டார நுகர்வோர் சங்கம் ஆகியன சார்பில்,
சேரங்கோடு மகளிர் தையல் பயிற்சி மையத்தில் இலவச கண் சிகிச்சைமுகாம்
நடந்தது.
முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்
HADP தேவதாஸ் சுகாதார செவிலியர் எலிசபெத் பந்தலூர் வட்டார நுகர்வோர் சங்க தலைவர் விஜய சிங்கம் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
நீலகிரி
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு மருத்துவமனை
மருத்துவருமான அமராவதி ராஜன் பேசும் போது ஏழை மக்கள் பயன் பெரும் விதமாக
இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுகின்றது நாற்பது வயதிர்ற்கு
மேற்பட்டவர்களுக்கு அதிகமாக பாதிக்கும் கண் புரை நோய்க்கு கண் புரை அறுவை
சிகிச்சை மட்டுமே தீர்வாகும் எனவே இது போன்ற முகாம்களில் பங்கேற்று பயன்
பெற வேண்டும் என்றார்
பின்னர் மருத்துவர் அமராவதி ராஜன் தலைமையிலான குழுவினர், பார்வை குறைபாடு உடையவர்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினர்முகாமில் சேரங்கோடு கிராம பகுதிகளை சேர்ந்த 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ௧௨ பேர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நிகழ்ச்சியில் , மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை களபணியளர்கள் முத்துராஜ் ஸ்ரீதர் கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ் தையல் பயிற்சி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்
ஷாலோம்
சாரிட்டபிள் டிரஸ்ட், இயக்குனர் விஜயன் சாமுவேல் வரவேற்றார்
கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகி நீலமலை ராஜா நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக