கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கையுன்னி சிறு தேயிலை விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு அறக்கட்டளை ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், ஆகியன சார்பில், கையுன்னி அரசு உயர் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சு. சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் கூடலூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வர்கீஸ் ஆகியோர் முகாமினை துவக்கி வைக்க நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு மருத்துவமனை மருத்துவருமான அமராவதி ராஜன் தலைமையிலான குழுவினர், பார்வை குறைபாடு உடையவர்களை பரிசோதித்து சிகிச்சைகள் ஆலோசனை வழங்கினர்
முகாமில் கையுன்னி பகுதிகளை சேர்ந்த 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நிகழ்ச்சியில் , மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை களபணியளர்கள் முத்துராஜ் ஸ்ரீதர் கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் கையுன்னி சிறு தேயிலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்
கையுன்னி சிறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் முகம்மது வரவேற்றார்
கையுன்னி சிறு தேயிலை விவசாயிகள் சங்க செயலாளர் ஆண்டனி நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்